Book Value பற்றிய ஒரு விளக்கம்

book value

பங்குச் சந்தையில் ஈடுபட்டிருக்கும் பலரும் பல வகையான குறியீடுகளை பயன்படுத்தி தாங்கள் வாங்க போகும் பங்குகளை தேர்வு செய்கின்றனர். அவற்றுள் அதிகமாக பேசப்படும் ஒரு குறியீடு தான் புத்தக மதிப்பு.

சுருக்கமாக சொன்னால், ஒரு நிறுவனத்தின் சொத்து மதிப்பிலிருந்து, அதன் கடன் மதிப்பை கழித்த பிறகு கிடைப்பதைதான் நாம் புத்தக மதிப்பு என்கிறோம்.

புத்தக மதிப்பு (Book Value) = சொத்துக்கள் (Assets) – கடன்கள்(Liabilities)

எடுத்துக்காட்டாக, ஒரு இயந்திரத்தின் விலை ரூ. 2 லட்சம் மற்றும் அதில் இருந்து வந்த தேய்மானம் (Depreciation) ரூ.50,000 எனில், அந்த இயந்திரத்தின் புத்தக மதிப்பு ரூ.1.5 லட்சம் ஆகும்.

முதலீட்டாளர்களுக்கு இது ஏன் மிகவும் முக்கியமானது என்றால், ஒரு நிறுவனத்தின் அனைத்து சொத்துக்களும் கலைக்கப்பட்டால் மற்றும் அனைத்து பொறுப்புகளும் தீர்க்கப்பட்டால் அந்த நிறுவனத்தின் உண்மையான மதிப்பு குறித்த உறுதியான அறிவை இது வழங்குகிறது.

மொத்த புத்தக மதிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள பங்குகளால் வகுத்தால் கிடைப்பதுதான் ஒரு பங்கின் புத்தக மதிப்பு ஆகும். ஒரு நிறுவனத்தின் மதிப்பை பலவாறாக கணக்கிடலாம். அவற்றில் புத்தக மதிப்பும் ஒன்று, மற்றொரு வகையில் பார்த்தால் ஒரு நிறுவனம் ஏதோ ஒரு காரணத்தால் மூடப்பட்டால் அதன் சொத்துக்களை விற்றால் எவ்வளவு கிடைக்கும் என்பதுதான் புத்தக மதிப்பு. இந்த மதிப்பு அனைத்து கம்பெனிகளின் Balance Sheet- ல் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *