Bonus:
ஒரு நிறுவனம் ஏற்கனவே அந்நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்போருக்கு, அவர்கள் ஏதும் பணம் தராமலேயே புதிய பங்குகளை இலவசமாகத் தருவது போனஸ் பங்குகள் எனப்படும். இந்த போனஸ் பங்குகளின் எண்ணிக்கை நிறுவனங்களைப் பொறுத்து வேறுபடலாம். ஒன்று வைத்திருப்பவர்களுக்கு மேலும் ஒன்று அல்லது இரண்டுக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கு இரண்டு என்பது போல போனஸ் பங்குகள் வழங்கப்படலாம்.
Bonus Ratio.
எல்லா நிறுவனங்களும் எல்லா சமயங்களிலும் ஒன்றுக்கு ஒன்று என போனஸ் ஷேர்கள் கொடுப்பதில்லை. சில சமயம் One for Five (1:5) அல்லது Five for One (5:1) என்பது போல விகிதத்தில் கொடுக்கலாம். இந்த விகிதம் Bonus Ratio எனப்படுகிறது.