ஒரு பங்கின் Market Price-ஐ EPS-ஆல் வகுத்தால் கிடைப்பதுதான் P/E. பொதுவாக P/E Ratio என்பது எதை குறிக்கிறது..? உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு பங்கை 100 ரூபாயில் வாங்குகிறீர்கள் என கொள்வோம். அதன் சென்ற ஆண்டு EPS ரூபாய் 25 என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால், அந்த பங்கின் P/E Ratio=4. அடுத்த 4 வருடங்களுக்கு இதேபோன்று ரூபாய் 25 EPS -ஆக வந்தால்தான், நீங்கள் வாங்கிய விலைக்கு ஈடாகிறது.
P/E Ratio= Share Price/EPS.
P/E Ratio பொதுவாக குறைவாக இருப்பதே நல்லது. மிக சிறிய நிறுவனங்களுக்கு P/E குறைவாக இருக்கும். நீங்கள் வாங்க நினைக்கும் நிறுவனத்தின் P/E Ratio- வை அந்த துறையை சார்ந்த மற்ற நிறுவனங்களின் சராசரி P/E Ratio-உடன் ஒப்பிட்டு பார்த்தால் உங்களுக்கு ஒரு தெளிவான பார்வை கிடைக்கும்.
ஆனால், P/E Ratio மட்டுமே ஒரு நிறுவனத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோல் அல்ல. இன்னும் நிறைய உள்ளன. அவற்றையும் பார்த்தபிறகு அந்தப் பங்கை வாங்கலாமா அல்லது வேண்டாமா என்று தெரிந்துகொள்ளலாம். குறைந்த P/E Ratio கொண்ட, நீண்ட காலமாக தொழில் செய்துவரக்கூடிய தரமான நிறுவனத்தை முதலீடு செய்ய தேர்ந்தெடுப்பது நல்லது.