கடந்த மூன்று ஆண்டுகளில் பல வரி சேமிப்பு ELSS திட்டங்கள் அதிக வருமானத்தை அளித்துள்ளன. இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்டுகள் சங்கத்தின் (AMFI) இணையதளத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதியின் தரவுகள், நேரடித் திட்டத்தின் கீழ் 28%-க்கும் அதிகமான வருமானத்தை வழங்கிய 10 ELSS திட்டங்கள் உள்ளன என்பதைக் காட்டுகிறது. இந்த திட்டங்களின் வழக்கமான திட்டங்கள் (Regular Plan) கூட மூன்று ஆண்டுகளில் 27%-க்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளன.
இந்த வரி-சேமிப்பு ELSS திட்டங்கள் எதிர்காலத்தில் இதுபோன்ற அதிக வருமானத்தைத் தரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றாலும், முதலீட்டாளர்கள் தங்கள் நிதி ஆலோசகர்களிடமிருந்து ஆலோசனையைப் பெற்ற பிறகு இந்த நிதிகளில் SIP-ஐத் தொடங்கலாம். ELSS நிதிகளில் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்தால், வருமான வரிச் சட்டத்தின் ’80C’ பிரிவின் கீழ் வரிவிலக்கு பெறலாம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் 28% அல்லது அதற்கு மேற்பட்ட வருமானத்துடன் (ஏப்ரல் 21, 2023 அன்று AMFI இணையதளத் தரவின்படி) சிறப்பாகச் செயல்படும் வரிச் சேமிப்பு திட்டங்களின் பட்டியல் பின்வருமாறு.
S. No | Fund Name | Direct Plan | Regular Plan |
1. | Quant Tax Plan | 46.61% | 43.92% |
2. | Bandhan Tax Advantage (ELSS) Fund | 36.18% | 34.63% |
3. | Parag Parikh Tax Saver Fund | 33.81% | 32.11% |
4. | PGIM India ELSS Tax Saver Fund | 30.01% | 28.34% |
5. | Bank of India Tax Advantage Fund | 29.01% | 27.60% |
6. | Mahindra Manulife ELSS Fund | 29.49% | 27.32% |
7. | Franklin India Taxshield Fund | 29.28% | 28.19% |
8. | HDFC Taxsaver Fund | 29.02% | 28.25% |
9. | Mirae Asset Tax Saver Fund | 29.63% | 27.94% |
10. | SBI Long Term Equity Fund | 28.98% | 28.18% |
மேற்கண்ட அனைத்து திட்டங்களும் Nifty 500-ன் மொத்த வருவாய் குறியீட்டைக் கண்காணிக்கின்றன.