கமாடிட்டி மார்கெட்: (பகுதி-6)

mcx-pannathot-post-9-1

கமாடிட்டியில் உள்ள Stocks – ஆ மூன்று விதமாக பிரிக்கலாம். அவை Bullions, Base Metals, Energy. இவற்றை பற்றி பதிவு – 1ல் பார்த்தோம். இதுல Bullions – ல உள்ள Gold பத்தியும் அதுல எப்படி Trade பண்ணலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். Gold- எல்லாருக்கும் பிடித்தமான ஒரு பொருள். கி.பி.3000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியன்ஸ் Gold – ஆ அணிகலன்களாக பயன்படுத்தினார்கள். Gold- ஒரு பண்டமாற்று பொருளாகவும் இருந்தது.

ஒவ்வொரு நாடும் தனிநபரும் தங்களுடைய எதிர்காலத்தை பாதுகாக்கும் முயற்சியில் இந்த விலைமதிப்பற்ற வளத்தை அதாவது Gold-ஐ சேமித்து வைக்கின்றனர். Australia (AUD), U.S., Canada (CAD), South African Rand (ZAR) போன்ற Countries Gold Production Countries – ஆக உள்ளன. இந்த Countries – ல Gold Price increase ஆகும் போது Currency value-வும் increase ஆகும்.

இந்தியாவில் International Price, இந்திய ரூபாயின் மதிப்பு, இந்திய Government tax இவற்றை பொருத்து Gold விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு நாட்டோட Currency Value குறையும் போது Gold – ன் Price உயரும். உலகலாவிய மிகப்பெரிய பிரச்சனை, போர் இவற்றாலும் Gold Price உயரும். மாதத்திற்கு ஒருமுறை நடக்கும் Fed Meeting -ம் Gold Price -ல் மாற்றத்தை ஏற்படுத்தும்.

Gold Future என்பது தங்க வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான பிரபலமான வழிகளில் ஒன்றாகும்.

*1972- ல், Chicago Mercantile Exchange – (CME) -ஆல் முதன் முதலாக Gold Future Trading தொடங்கப்பட்டது.

  • 1974-ல் COMEX Exchange – ஆல் First Gold Future Contract, Newyork-ல் தொடங்கப்பட்டது.
  • 1980-ல் Gold Over – The – Counter Trading (beginning of online Trading) தொடங்கப்பட்டது.

Gold Futures – ஐ பொறுத்தவரை அதிகளவு முதலீடு தேவைப்படும். Gold – Contract அடிப்படையில் Trading செய்யப்படுகிறது. இதோட Lot size – 1KGS (100)ஆகும். Gold-ல் Trading செய்வதற்கு 100 Lot – க்கு ரூபாய் 5,53,186 முதலீடு தேவைப்படுகிறது. Gold -ல் மார்க்கெட் Moment – ஐ பொருத்து Target -100 to 300 Points- லும் Stop Loss -100 Points -லும் வைப்பது நல்லது. 100 Points வைக்கும்போது Profit 100 x 100=10,000 ரூபாய் கிடைக்கும். எந்த ஒரு Stocks ஆக இருந்தாலும் Stop Loss – Set செய்வதை மறக்காமல் இருப்பது நல்லது. இது அதிக Loss ஏற்படுவதை தடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *