கமாடிட்டி மார்கெட்: (பகுதி-10) Silver Future Trading

silver trading

Gold-க்கு அடுத்தபடிய எல்லோருக்கும் பிடித்தமான பொருள் Silver. கடந்த காலத்தில் வெள்ளி நாணயமாக, நாணய வடிவில் பயன்படுத்தப்பட்டது. இது பல தொழில்துறை மற்றும் அறிவியல் பயன்பாடுகளுக்கும் மின்னணுவியல் மருத்துவம் போன்ற பலவற்றிற்கும் பயனுள்ளதாக இருந்ததது.

♦️லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச் (LME) 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் Silver Trading -ஐ தொடங்கியது.

♦️மேலும் 1920-ல் பல சர்வதேச பரிமாற்றங்களில் வெள்ளி ஒரு Psysical metal – ஆக மாறியது.

♦️1970 மற்றும் 1980 – ல் கமாடிட்டி மார்கெட்டில் Silver Trading குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டது.

♦️1975-ம் ஆண்டில் சிகாகோ மெர்கன்டைல் எக்ஸ்சேஞ்ச் (CME) – Silver Future Contract – ஐ அறிமுகப்படுத்தியது.

♦️Peru, Bolivia, Mexico, Chile, Australia, China, poland போன்ற நாடுகளில் வெள்ளி உற்பத்தி செய்யப்படுகிறது.

வெள்ளி உற்பத்தி மிகவும் சிறியதாக இருந்தாலும் உலகிலேயே வெள்ளியின் மிகப்பெரிய நுகர்வோராக உள்ள நாடு இந்தியா. நாட்டின்மிகப்பெரிய உற்பத்தியாளர் Hindustan zinc Ltd, 2018-ல் 600 டன்களுக்கு மேல் Silver உற்பத்தி செய்தது. இது நாட்டின் உற்பத்தியில் 95 சதவீதம் ஆகும்.

Gold Future போலவே Silver Future -ம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. இந்தியாவில், International Price, இந்திய ரூபாயின் மதிப்பு, இந்திய Government Tax இவற்றைப் பொறுத்து Gold-ன் விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறதோ அதேபோன்று Silver-ன் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. U.S. dollar -ம் Silver -ன் விலையை பாதிக்கிறது. உலகளாவிய மிகப்பெரிய பிரச்சனை போர் இவற்றாலும் Silver Price உயரும்.

Silver Future Trading வெள்ளி வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான வழிகளில் ஒன்றாகும். Silver – Contract அடிப்படையில் Trading செய்யப்படுகிறது. இதோட, Lot size – 30 KGS ஆகும். Silver Future – ஐ பொறுத்தவரை Trading செய்வதற்கு 30 KGS-க்கு- 2,68,071 ரூபாய் முதலீடு தேவைப்படும். Silver-ல் மார்க்கெட் Moment – ஐ பொருத்து Target – 200-1000 Points லும் Stop Loss – 200 Points-லும் வைத்து Trading செய்யலாம். Target 200 Points – ல் வைக்கும் போது Profit 200 x 30 = 6000 ரூபாய் கிடைக்கும்.

Silver மட்டுமின்றி Silver Mini, Silver Micro போன்றவற்றிலும் Trading செய்யப்படுகிறது. இதில் Trading செய்வதற்கு குறைந்த முதலீடு மட்டுமே தேவைப்படும். Silver Mini – யில் Trading செய்வதற்கு Lot Size-5 KGS – க்கு 44,482 ரூபாய் முதலீடு தேவைப்படும். Target – 200 முதல் 1000 Points ல் வைக்கலாம். Target 200 points போது 200 x 5 =1000 ரூபாய் Profit கிடைக்கும். மற்றும் Stop Loss – 200 Points – ல் வைக்கலாம்.

Silver Micro-வில் Trading செய்வதற்கு Lot Size-1 KGS – க்கு 9041 ரூபாய் முதலீடு தேவைப்படும். Target – 200 முதல் 1000 Points ல் வைக்கலாம். Target 200 Points – ல் வைக்கும் போது 200 x 1 = 200 ரூபாய் Profit கிடைக்கும். மற்றும் Stop Loss – 200 Points – ல் வைக்கலாம். முக்கியமாக Stop Loss- Set செய்வதை மறக்காமல் இருப்பது நல்லது. இது அதிக Loss ஏற்படாமல் தடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *