ஒரு நிறுவனமானது லாபம் அடைந்தவுடன் அதனை முழுவதுமாக அந்த வருடமே எல்லா Shareholders-க்கும் பிரித்து கொடுத்துவிடாது. வரவு ஒன்று இருந்தால் செலவு ஒன்று இருக்குமல்லவா. அதனால் நிறுவனங்கள் சிறிதளவு கொடுத்துவிட்டு மீதத்தை சேமித்து வைக்கும். இதுபோன்று சேமித்து வைக்கும் பணத்தை Reserves & Surplus என்று கூறுவர்.
சில நிறுவனங்கள் வியாபாரம் தொடங்கியதிலிருந்தே Shareholders-க்கு Dividend, Bonus போன்று ஏதாவது கொடுத்துவரும். சில நிறுவனங்கள் வருடங்கள் பல ஆகியும் ஏதும் கொடுக்காமலும் உள்ளன. இதற்கு காரணங்கள் பல இருக்கலாம். ஒன்று உண்மையாகவே நிறுவனம் ஏதும் சம்பாதிக்காமல் இருக்கலாம். அல்லது சம்பாதித்தும் கொடுக்க மனமில்லாமல் இருக்கலாம். சில ஆண்டுகளில் லாபம் போதவில்லையென்றாலும், இந்த Reserves and Surplus-லிருந்து Dividend கொடுப்பார்கள்.
ஆனால், அந்த ஆண்டில் ஏதும் சம்பாதிக்காமல் இருந்தால், இதிலிருந்து Dividend கொடுப்பார்களா என்றால் சந்தேகம் தான். தீபாவளி போன்ற தினங்களில் முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு Bonus கொடுப்பது போல, நிறுவனங்களும், சில நேரங்களில் அதிகமான Dividend கொடுப்பது உண்டு. கொடுத்தது போக மீதம் உள்ள பணம் Reserves and Surplus-ல் சேரும்