SGB தங்க பத்திரங்கள் இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்படுகின்றன. இதில் தங்கம் தான் வாங்கி விற்கப்படுகிறது ஆனால் தங்கமாகவே வாங்கி விற்கப்படவில்லை. தங்கத்துக்கு பதிலாக இவ்வளவு கிராம் தங்கம் என்று எழுதப்பட்ட Bond பேப்பர் தான் வாங்கி விற்கப்படுகிறது.
இந்த தங்க பத்திரங்கள் தற்போது விற்பனைக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த பத்திரங்களை பிப்ரவரி 12 முதல் 16 வரை, Post-Office, Banks மற்றும் Demat Account மூலம் வாங்கிக் கொள்ளலாம். ஆன்லைன் வழியாக வாங்கும்போது கிராமிற்கு 50 ரூபாய் தள்ளுபடி உண்டு.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
இந்தத் திட்டத்தில் இந்திய குடிமக்கள், பல்கலைக்கழகங்கள், தர்ம ஸ்தாபனங்கள் போன்றவை இந்த பத்திரங்களை வாங்கலாம். இந்த பத்திரங்களை குறைந்தபட்சம் ஒரு கிராம் அளவில் வாங்க முடியும். அதிகபட்சத்திற்கு வரம்பு உண்டு. தனி நபர் ஆண்டுக்கு 4000 கிராம் அதாவது 4 கிலோ வரை வாங்கலாம். ட்ரஸ்டுகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஒரு ஆண்டில் 20 கிலோ வரை வாங்கலாம்.
ரூபாய் 20000 வரை வாங்குவதாக இருந்தால் ரொக்கம் அனுமதிக்கப்படுகிறது. அதற்கு மேற்பட்ட தொகையை வங்கி காசோலை, Demand Draft அல்லது இணைய பணப்பரிமாற்றம் மூலம் பணம் செலுத்த வேண்டும்.
இது எட்டு ஆண்டுகால Bond பத்திரம். இதற்கு ஆண்டுக்கு 2.5% வட்டி வழங்கப்படும். இந்த வட்டி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது வைப்பு காலம் முடிந்த பிறகு கிடைக்கும். வட்டி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். வட்டி பணத்தில் TDS பிடிக்க மாட்டார்கள். ஆனால், வருமான வரி உண்டு.
SGB பத்திரங்கள் 8 ஆண்டு கால பத்திரங்கள் ஆகும். இவற்றில் போடும் பணத்தை 5 ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்க முடியாது. அதன் பின் எடுக்கலாம். ஐந்தாவது ஆண்டு முடிவில் எடுக்காவிட்டால் எட்டாவது ஆண்டில் அது தானாகவே முடிவுக்கு வந்துவிடும். அப்போது தங்கமாகவோ, பணமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.