Indicators பற்றிய தகவல்கள்

indicators

பங்குச்சந்தையில் பொதுவாக பலரும் பயன்படுத்தும் அல்லது பின்பற்றும் சில இண்டிகேட்டர் உள்ளன. இவை சந்தையின் நிலையை கணிக்க உதவுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

1. Monetary Indicators:

பணவீக்கம் குறைகிறதா, அதிகரிக்கிறதா? Reserve Bank Interest Rate-ஐ உயர்த்துகிறதா? இறக்குகிறதா? நாட்டில் Credit growth எனப்படும், வர்த்தகத்துக்காக மக்கள், நிறுவனங்கள் கடன் வாங்குவது அதிகரிக்கிறதா, குறைகிறதா? இவற்றையெல்லாம் Monetary Indicators என்கிறோம். அவற்றை வைத்து சந்தை எந்த திசையில் நகரும் என கணிக்கலாம்.

2. Sentiment Indicators:

Sentiment என்றால் மக்களின் மனநிலை. Market – இல் இயங்குபவர்கள் Bullish ஆக இருக்கிறார்களா, Bearish ஆக இருக்கிறார்களா என்று பார்ப்பது. எப்படி பார்ப்பது என்றால், Put & Call option வைத்து பார்க்கலாம். Put option என்றால், மக்கள் விற்று வைக்கிறார்கள் என்பதும், Call option என்றால், மக்கள் வாங்குகிறார்கள் விலை உயரும் என்று அர்த்தம். இதன் Ratio தான் மொத்த மார்க்கெட்டுக்கும் ஒரு Indicator.

3. Momentum Indicators:

எவ்வளவு பங்குகள் விலை உயர்கின்றனவா? அல்லது இறங்குகின்றனவா? எவ்வளவு Quantity வியாபாரம் நடக்கிறது. எவ்வளவு பங்குகள் 52 வார உச்சங்கள் மற்றும் அடிமட்டங்களைத் தொடுகின்றன என்பவற்றைக் கொண்டு Momentum பற்றிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *