மியூச்சுவல் ஃபண்ட் உலகம் Index Funds என்றால் என்ன?

index fund

பல்வகைப்படுத்தல் என்பது ஒரு நல்ல முதலீட்டு போர்ட்ஃபோலியோவின் முக்கிய அங்கமாகும். இதில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் தங்கள் நிதிகளை ஈக்விட்டி, கடன், ரியல் எஸ்டேட், தங்கம் போன்ற பல்வேறு வகையான சொத்துகளை இதில் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு சொத்துகளை முதலீடு செய்யும் போது அவற்றில் உள்ள ஆபத்தைக் குறைக்கவும் மற்றும் பல்வகைப்படுத்தவும் முயற்சி செய்கின்றனர். ஈக்விட்டி முதலீட்டில் பல்வேறு வகை துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் மற்றும் சந்தை மூலதனம் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் ஈக்விட்டி போர்ட்ஃபோலியோவைப் பல்வகைப்படுத்தி அவற்றின் ஆபத்தைக் குறைப்பதற்கும் வழிவகுக்கிறது.

Index Funds என்றால் என்ன?

பெயர் குறிப்பிடுவது போல ஒரு Index-ன் Mutual Fund-யை பங்குச் சந்தையின் குறியீட்டைப் பின்பற்றும் வகையில் NSE Nifty, BSE Sensex போன்ற Index- களில் முதலீடு செய்யலாம். அதாவது நிதி மேலாளர் அடிப்படைக் குறியீட்டில் உள்ள அதே பத்திரங்களில் முதலீடு செய்கிறார். அதே விகிதத்தில் உள்ள போர்ட்ஃபோலியோவின் கலவை மாறாது. இந்த நிதிகள் அவர்கள் கண்காணிக்கும் குறியீட்டுடன் ஒப்பிடக்கூடிய வருமானத்தை வழங்க முயற்சி செய்கிறது.

Index Funds எப்படி வேலை செய்கின்றன?

ஒரு குறியீட்டு நிதியானது NSE Nifty-யின் குறியீட்டைக் கண்காணிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த ஃபண்ட் தான் அதன் போர்ட்ஃபோலியோ விகிதத்தில் உள்ள 50 பங்குகளைக் கொண்டிருக்கும். இதேபோல் நிஃப்டியின் மொத்த சந்தைக் குறியீட்டைப் போன்று ஒரு பரந்த சந்தைக் குறியீடு அதன் போர்ட்ஃபோலியோவில் உள்ள சந்தையின் Capital மற்றும் துறைகள் சுமார் 750 பங்குகளைக் கொண்டிருக்கும். குறியீட்டு பத்திரங்களில் உள்ள பங்கு மற்றும் பங்கு தொடர்பான சந்தைகளில் இவை அடங்கும். குறியீட்டு நிதியானது குறியீட்டைக் கண்காணிக்கும் அனைத்துப் பத்திரங்களிலும் முதலீடு செய்வதை இது உறுதி செய்கிறது.

Index Funds-ல் யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?

Index Funds சந்தைக் குறியீட்டைக் கண்காணிப்பதால் அதனுடைய வருமானம் தோராயமாக குறியீட்டால் வழங்கப்படுவதைப் போல் இருக்கும். எனவே அவர்கள் கணிக்கக்கூடிய வருமானத்தை ஈட்டும் முதலீட்டாளர்கள் மற்றும் அதிக ரிஸ்க் எடுக்காமல் ஈக்விட்டி சந்தைகளில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் இந்த நிதிகளை விரும்புகிறார்கள். நிதி மேலாளர் போர்ட்ஃபோலியோவின் அடிப்படைப் பத்திரங்களை சாத்தியமான செயல்திறன் மதிப்பீட்டின் அடிப்படையில் மாற்றுகிறார். குறியீட்டு நிதிகள் செயலற்ற முறையில் நிர்வகிக்கப்படுவதால் ஆபத்து அவ்வளவாக ஏற்படாது. இருப்பினும் Index வழங்கியதை விட அதிக வருமானம் இதில் இருக்காது. அதிக வருமானம் ஈட்டும் முதலீட்டாளர்களுக்கு ஈக்விட்டி ஃபண்டுகள் சிறந்த வழியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *