Charles Dow என்பவர் “Wall Street Journal” என்ற இதழில் 1900 முதல் 1902 வரை எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே Dow Theory. அவர் அன்று சொன்னது ஒரு நூற்றாண்டைத் தாண்டி இன்று வரை செல்லுபடியாகிறது. அவை
1. மார்க்கெட்டில் நடப்பவற்றை பங்கு விலைகள் காட்டிக்கொடுத்துவிடும்.
2. மார்க்கெட்டில் மூன்று விதமான Trend-கள் உள்ளன.
1. Primary Trend.
அது ஏறுமுகமாகவோ, இறங்குமுகமாகவோ இருக்கலாம். அது ஓராண்டுக்கு குறையாமல் இருக்கலாம். கூடுதல் ஆண்டுகளும் போகலாம். market ஏறுமுகமாக இருந்தால், தொடர்ந்து புதிய புதிய உயரங்களையோ, இறங்குமுகமாக இருந்தால், புதிய புதிய குறைவுகளை அடையும்.
2. Secondary Trend.
இது Primary Trend-ன் Corrective Trend எனப்படும். முதலாவது uptrend என்றால், இது அதனுள் அடங்கும் சிறிய இறங்குமுகங்களாக இருக்கும். இவை மூன்று மாதங்கள் வரை இருக்கலாம். உயருவது இறங்கும். மீண்டும் உயரும். பழைய உயரத்தை தாண்டும். மீண்டும் இறங்கும். ஆனால் பழைய இறக்கத்துக்கு கீழ் போகாது. Forming higher highs and higher lows நடக்கும்.
Primary Trend down என்றால், இடையில் சற்று உயரும். ஆனால், முந்தய உயரம் போகாது. பின்பு விழும். விழுவது முந்தய அளவைவிட அதிகமாகவே கிழே விழும். Forming lower highs and lower lows.
3. Minor Trend.
அவை ஒரு நாள் முதல் மூன்று வாரங்கள் வரைகூட இருக்கலாம். இவை Primary Trend மற்றும் Secondary Trend- க்குள் நிகழும் சிறிய Trend-கள். இவற்றின் தாக்கம் நீண்ட நாட்கள் இருக்காது.