மியூச்சுவல் ஃபண்ட் உலகம்- Dynamic Mutual Funds

dynamic mutual funds

Dynamic Mutual Funds என்பது ‘டைனமிக்’ maturity-ஐ (முதிர்வு) கொண்டுள்ளன. இந்த நிதிகள் சந்தையின் ஏற்ற,இறக்க சுழற்சிகளில் நல்ல வருமானத்தை வழங்குவதற்கான முதலீட்டு நோக்கத்தைக் கொண்டுள்ளன. Dynamic Debt Funds-ன் Fund Manager, வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து Portfolio மாறும் வகையில் நிர்வகிக்கிறார்.

வட்டி விகிதங்களைப் பற்றி பேசும் பொழுது வட்டி விகித மாற்றங்களுக்கு இடையில் இடைநிறுத்தங்கள் இருக்கலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த இடைநிறுத்தங்கள் பத்திரங்களின் வருமானத்தையும் பாதிக்கலாம். எனவே, வட்டி விகிதங்களைப் பொருட்படுத்தாமல் தங்கள் பத்திர முதலீடுகளிலிருந்து வருமானத்தை ஈட்ட விரும்பும் முதலீட்டாளர்களுக்கு Dynamic Mutual Funds ஒரு நல்ல வழி.

Dynamic Fund-ன் முக்கியமான அம்சம் என்னவென்றால், அது குறுகிய கால மற்றும் நீண்ட காலப் பத்திரங்களுக்கு இடையில் n நேரத்தில் மாறுகிறது. எனவே, வட்டி விகிதங்கள் குறையும் என்று நிதி மேலாளர் (Fund Manager) உணர்ந்தால், அவர் நீண்ட கால பத்திரங்களுக்கு மாறுகிறார். மறுபுறம், வட்டி விகிதங்கள் மிகக் குறைந்த உச்சத்தை அடைந்துவிட்டால் , இங்கிருந்து மட்டுமே உயரும் என்றும் அவர் உணர்ந்தால், குறுகிய காலப் பத்திரங்களுக்கு மாறுவதன் மூலம் நீண்ட காலப் பத்திரங்களிலிருந்து தனது இழப்புகளைப் பாதுகாக்கிறார். இது திடீர் வட்டி விகித மாற்றங்களை அகற்ற உதவுகிறது. மேலும் Dynamic Debt Fund-ன் நிதி மேலாளர் வட்டி விகித மாற்றத்தின் எதிர்பார்ப்பைப் பொறுத்து Gilts அல்லது கார்ப்பரேட் பத்திரங்களில் முதலீடு செய்கிறார்.

சந்தையில் ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள், interest rate movements பகுப்பாய்வு செய்வதிலும், அதற்கேற்ப முதலீடு செய்வதிலும் திறமையானவர்கள் தங்கள் சொந்த Dynamic Bond Portfolio-வை உருவாக்கலாம். இருப்பினும் இதில் முதலீடு செய்ய தெரியாத முதலீட்டாளர்கள் Dynamic Bond-யை தேர்வு செய்யலாம். சுமார் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை முதலீட்டுக் காலம் இருக்கும். மேலும், இந்த நிதிகளில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு Moderate Risk Tolerance தேவை. இந்த நிதிகளை அணுகுவதற்கு SIP-கள் ஒரு சிறந்த வழியாகும், ஏனெனில் நீங்கள் வட்டி விகித ஏற்ற இறக்கத்தை சிறப்பாக எதிர்கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *