Multi Cap Fund vs Flexi Cap Fund-வேறுபாடுகள்!

multi-vs-flexi

பலருக்கும் இந்த இரண்டு ஃபண்டுகளை பற்றிய சந்தேகம் இருக்கும். காரணம், இவற்றில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் ஒன்று போல இருப்பதால். ஆனால், இவை இரண்டும் ஒன்றல்ல… இரண்டு ஃபண்டுகளும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்றன. அது எவ்வாறு என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மியூச்சுவல் ஃபண்டை பொருத்தவரை பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்ய Large Cap ஃபண்டுகளும், நடுத்தர நிறுவனங்களில் முதலீடு செய்ய Mid Cap ஃபண்டுகளும், சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்ய Small Cap ஃபண்டுகளும் உள்ளன.

பெரிய, சிறிய மற்றும் நடுத்தர என அனைத்து நிறுவனங்களிலும் முதலீடு செய்யும் ஒரு நிதி வகை தான் Multi Cap Fund. இங்கு மூன்று வகையான நிறுவனங்களிலும் (large, mid, small cap) தலா 25% முதலீடு செய்யப்படுகிறது. மீதி 25% தொகையானது Fund Manager-ன் விருப்பத்தின்படி எந்த வகை நிறுவனத்தின் வேணாலும் முதலீடு செய்யப்படலாம்.

ஆனால், Flexi Cap-ல் இந்த மாதிரியான எந்த கட்டுப்பாடும் கிடையாது. Fund Manager-ன் விருப்பத்தின்படி எந்த வகை நிறுவனத்திலும், எவ்வளவு தொகை வேணாலும் முதலீடு செய்யலாம். தற்போதைய நிலவரத்தின் படி, 70-75 சதவீத முதலீடானது Large cap நிறுவனங்களிலே முதலீடு செய்யப்படுகிறது.

இவை இரண்டும் Equity ஃபண்டுகளாக இருப்பதால் நீண்ட கால நோக்கில் நல்ல பலனை அளிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *