கடந்த 10 ஆண்டுகளில் அதிக லாபம் தந்த Top 10 Small Cap மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!

IMAGE 1669039695

கடந்த 10 ஆண்டுகளில் பல Small Cap மியூச்சுவல் ஃபண்டுகள் மிக அதிக வருமானத்தை அளித்துள்ளன. 10 ஆண்டுகளில் நேரடித் திட்டத்தின் (Direct Plan) கீழ் 15%-க்கும் அதிகமான வருமானத்தை அளித்த 10 Small Cap ஃபண்டுகள் இருப்பதாக ஏப்ரல் 21 ஆம் தேதி நிலவரப்படி, மியூச்சுவல் ஃபண்ட் சங்கத்தின் (AMFI) இணையதளத்தில் உள்ள தரவு காட்டுகிறது. இந்த திட்டங்களின் வழக்கமான திட்டங்கள் (Regular Plan) கூட 15%-க்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளன.

இந்த Small Cap ஃபண்டுகள் எதிர்காலத்தில் இதுபோன்ற அதிக வருமானத்தைத் தரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றாலும், முதலீட்டாளர்கள் தங்கள் நிதி ஆலோசகர்களின் ஆலோசனையைப் பெற்ற பிறகு இந்தத் திட்டங்களில் SIP-ஐத் தொடங்கலாம்.

கடந்த 10 ஆண்டுகளில் 15% அல்லது அதற்கு மேற்பட்ட வருமானத்துடன் (ஏப்ரல் 21, 2023 அன்று AMFI இணையதளத் தரவின்படி) சிறப்பாகச் செயல்படும் 10 Small Cap ஃபண்டுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

S. NoFund NameDirect PlanRegular Plan
1.Nippon India Small Cap Fund26.87%25.67%
2.SBI Small Cap Fund26.09%24.68%
3.DSP Small Cap Fund23.14%22.25%
4.Franklin India Smaller Companies Fund21.41%20.17%
5.Kotak Small Cap Fund21.44%19.87%
6.Sundaram Small Cap Fund19.37%18.42%
7.HDFC Small Cap Fund19.7%18.43%
8.ICICI Prudential Small Cap Fund17.57%16.51%
9.Aditya Birla Sun Life Small Cap Fund16.91%15.72%
10.Quant Small Cap Fund15.79%15.10%
Source : AMFI India

மேற்கண்ட அனைத்து திட்டங்களும் Nifty Small Cap 250 -ன் மொத்த வருவாய் குறியீட்டைக் கண்காணிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *