ஒரு புரோக்கர் நிறுவனத்தின் மூலமாக பங்குகள் வாங்கும் பொழுது, அவர் நமக்காகச் சந்தையில் என்ன விலைக்குப் பங்குகளை வாங்குகிறாரோ அதற்கு ‘Market Rate (மார்க்கெட் விலை)’ என்று பெயர். இந்த விலைக்கு அவர்கள் நமக்குத் தர மாட்டார்கள். அதற்கு மேல் அவர், தமது சேவைக்கான கட்டணத்தை (Brokerage) எடுத்துக் கொள்வார். Market Rate என்றால் அவர் நமக்காகச் செய்த (வாங்கிய அல்லது விற்ற) டிரேடிங்கின் விலை.
Net Rate.
மார்க்கெட் விலையுடன் Brokerage கட்டணத்தையும் சேர்த்தால் வருவதுதான் Net Rate. உதாரணத்துக்கு ஒரு பங்கு, Market rate ரூ. 431 என வைத்துக் கொள்வோம். அவருடைய Brokerage 0.35%, அதாவது நூறு ரூபாய்க்கு 35 காசு, வாங்கிய மார்க்கெட் ரேட் ரூபாய் 431-க்கு Brokerage ரூ.15.10. ஆக நெட் ரேட் 446.10 நாம் வாங்கிய 431 ரூபாய் பங்குக்கு ரூ. 446 கொடுக்க வேண்டும். அதேபோல், விற்கும் பொழுது நம் பணத்தில் Brokerage-க்கு கழித்துக் கொள்வார். நிறுவனத்திற்கு நிறுவனம் இந்த Brokerage Rate மாறுபடலாம்.