Fundamental Analysis – ல் ஒரு நிறுவனத்தின் பங்குகளை யாரெல்லாம் வைத்திருக்கிறார்கள் என தெரிந்து கொள்ள இது உதவுகிறது.
ஒரு நிறுவனத்தில் Promoters, FII, DII, Government, Public என பலர் Share Holder- ஆக இருப்பார்கள். ஒரு பங்கில் முதலீடு செய்யும் முன் அதில் Share Holder உள்ள விகிதத்தை ஆராய்ந்து முடிவெடுப்பது சிறந்தது.
நன்றாக செயல்படும் Mutual Fund நிறுவனங்கள், அரசு சார்ந்த மற்றும் தனியார் துறையின் பெரிய முதலீட்டு நிறுவனங்கள், இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள், IFC (International Finance Corporation) போன்ற நிறுவனங்கள் Share Holder-ஆக இருப்பது நல்லது. முதலீடு செய்ய பங்குகளை தேர்வு செய்யும் போது இதை நீங்கள் ஒரு Filter-ஆக பயன்படுத்திக்கொள்ளலாம். ஏனெனில், இது போன்ற பெரிய முதலீட்டாளர்கள் ஆராயாமல் ஒரு நிறுவன பங்குகளை வாங்கியிருக்கமாட்டார்கள்.
FII என்கிற வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் DII எனப்படும் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் Share Holder-ஆக இருப்பது ஒரு வகையில் நன்மை. அவர்கள் முதலீடு செய்யும் போது பங்குகளின் விலை பெரிய அளவில் உயரும். மற்றொரு வகையில் தீமை என பார்த்தால் இவர்கள் பங்குகளை விற்கும் போது அவற்றின் விலை பெரிய அளவில் இறங்க வாய்ப்புள்ளது.