JSW Steel, ஆஸ்திரேலியாவின் Whitehaven Coal நிறுவனத்திற்கு சொந்தமான பிளாக்வாட்டர் நிலக்கரிச் சுரங்கத்தில் 20 சதவீதப் பங்குகளைப் பெறுவதற்கான விவாதங்களில் ஈடுபட்டு வருகிறது, இந்த ஒப்பந்தம் $750 மில்லியன் முதல் $1 பில்லியன் வரையிலான மதிப்பிலானது. குயின்ஸ்லாந்தின் போவன் பேசினில் அமைந்துள்ள இந்தச் சுரங்கமானது, இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய திறந்தவெளி உலோகவியல் நிலக்கரி உற்பத்தியாளர்களில் ஒன்றாகும். அடுத்த ஐந்தாண்டுகளில் ஆண்டுதோறும் சராசரியாக 14.8 மில்லியன் டன் உலோகவியல் நிலக்கரியை விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. Whitehaven நிலக்கரி […]
உ. பி. யில் 1 டிரில்லியன் டாலர் இலக்கு, சரியான கொள்கை மற்றும் சரியான அமலாக்கத்தால் எட்டப்படும்: யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சரியான கொள்கைகளுடன் 1 trillion dollar இலக்கை உத்தரப் பிரதேச மாநில அரசு எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தை 1 trillion அமெரிக்க dollar பொருளாதாரமாக உருவாக்கும் லட்சியத்தை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட தற்போதைய முயற்சிகள் மற்றும் எதிர்கால கொள்கைகள் குறித்து முதலமைச்சர் அவர்கள் கூட்டத்தில் விவாதித்தார். எங்களது நோக்கம் தெளிவானது, இலக்குகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது, சரியான கொள்கை மற்றும் துல்லியமான அமலாக்கத்துடன், நாங்கள் 1 trillion […]
Indicators பற்றிய தகவல்கள்
பங்குச்சந்தையில் பொதுவாக பலரும் பயன்படுத்தும் அல்லது பின்பற்றும் சில இண்டிகேட்டர் உள்ளன. இவை சந்தையின் நிலையை கணிக்க உதவுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம். 1. Monetary Indicators: பணவீக்கம் குறைகிறதா, அதிகரிக்கிறதா? Reserve Bank Interest Rate-ஐ உயர்த்துகிறதா? இறக்குகிறதா? நாட்டில் Credit growth எனப்படும், வர்த்தகத்துக்காக மக்கள், நிறுவனங்கள் கடன் வாங்குவது அதிகரிக்கிறதா, குறைகிறதா? இவற்றையெல்லாம் Monetary Indicators என்கிறோம். அவற்றை வைத்து சந்தை எந்த திசையில் நகரும் என கணிக்கலாம். 2. Sentiment […]
Gross Profit Margin (GPM) மற்றும் Net profit Margin (NPM) என்றால் என்ன?
Gross Profit Margin என்பது ஒரு நிறுவனம் தனக்காகும் செலவுகள் போக , விற்பனைப் பணத்தில் எத்தனை சதவிகிதம் லாபம் பார்க்கிறது என்பதாகும். இது வரி மற்றும் தேய்மானத்துக்கு (Depreciation) முந்தைய லாபச் சதவிகிதம். Net profit Margin (NPM). Net profit Margin என்பது வரி மற்றும் தேய்மானத்துக்குப் பிந்தைய லாப சதவிகிதம். 100 ரூபாய்க்கு வியாபாரம் , 70 ரூபாய் செலவுகள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் வரி, தேய்மானத்துக்கு முந்தைய லாபம் என்பது […]
Forward Earnings என்றால் என்ன?
பசுமாடு வாங்கும்பொழுது அதன் வயது மற்றும் வருங்காலத்தில் எவ்வளவு பால் கறக்கும் என்றெல்லாம் பார்ப்போம் அல்லவா. அதுபோலதான் பங்குச்சந்தையை பொறுத்தவரை அதில் உள்ள நிறுவனங்களையும் பார்ப்பார்கள். ஒரு நிறுவனம் இப்பொழுது நன்றாக சம்பாதிக்கிறது அதெல்லாம் சரிதான்… ஆனால் அதே நிறுவனம், அடுத்த வருடம், அதற்கடுத்த வருடமெல்லாம் எவ்வளவு சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கின்றன? அப்பொழுது அந்த நிறுவனத்தின் EPS என்னவாக இருக்கும்? அப்பொழுது என்ன விலையில் இருக்கும் என்றெல்லாம் கணக்கு போட்டு, இன்றைய விலையினை முடிவுசெய்கிறார்கள். அதாவது இன்று […]
Sovereign Gold Bonds பற்றிய சில தகவல்கள்
SGB தங்க பத்திரங்கள் இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்படுகின்றன. இதில் தங்கம் தான் வாங்கி விற்கப்படுகிறது ஆனால் தங்கமாகவே வாங்கி விற்கப்படவில்லை. தங்கத்துக்கு பதிலாக இவ்வளவு கிராம் தங்கம் என்று எழுதப்பட்ட Bond பேப்பர் தான் வாங்கி விற்கப்படுகிறது. இந்த தங்க பத்திரங்கள் தற்போது விற்பனைக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த பத்திரங்களை பிப்ரவரி 12 முதல் 16 வரை, Post-Office, Banks மற்றும் Demat Account மூலம் வாங்கிக் கொள்ளலாம். ஆன்லைன் வழியாக வாங்கும்போது கிராமிற்கு 50 ரூபாய் தள்ளுபடி […]
EBITDA (Earnings Before Interest, Taxes, Depreciation, and Amortization) என்றால் என்ன?
EBITDA என்பது ஒரு நிதி அளவீடு ஆகும். நிதி அடிப்படையில் தங்கள் வணிகத்தின் செயல்திறனைக் கணக்கிட நிறுவனங்கள் இதைப் பயன்படுத்துகின்றன. இது நிகர வருமானத்தில் லாபத்தை அளவிடுவதற்கான மாற்று முறையாகும். இது மூலதன கட்டமைப்பைச் சார்ந்துள்ள பணமில்லா தேய்மானம், கடனீட்டுச் செலவு, வரிகள் மற்றும் கடன் செலவுகளை நீக்கி மீதியுள்ள மதிப்பை குறிப்பிடுகிறது. வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முந்தைய வருவாய், நிறுவனத்தின் செயல்பாடுகளால் உருவாக்கப்பட்ட பண லாபத்தைக் காட்ட முயற்சிக்கிறது. மேலும், […]
Beta Value என்றால் என்ன?
பீட்டா (Beta) என்பது ஒட்டுமொத்த சந்தையின் அசைவுகளுடன் தொடர்புடைய ஒரு பங்கின் எதிர்பார்க்கப்படும் நகர்வை அளவிலும் ஒரு கருத்தாகும். ஒரு பங்கின் உடைய Beta Value ஒன்றுக்கு மேல் இருந்தால் மார்க்கெடை விட, அதிக ஏற்ற இறக்கம் உள்ள பங்கு என கருதப்படுகிறது. Beta Value ஒன்றுக்கு கீழே இருந்தால் மார்க்கெடை விட குறைவான நேற்றைய ஏற்ற இறக்கம் உள்ள பங்கு என பொருள். Negative ஆக இருந்தால் ரிவர்ஸ் கோரிலேஷன் (Reverse Correlation) என்று பொருள். […]
Debt Bonds மற்றும் Debt funds பற்றிய சில தகவல்கள்
கடன் பத்திரங்களில் முதலீடு என்பது, பத்திரங்களின் அடிப்படையில் நிறுவனங்கள், அரசாங்கங்கள் அல்லது பணம் கடன் வாங்க வேண்டிய பிற நிறுவனங்களால் வழங்கப்படும் கடன் கருவிகள் ஆகும். நீங்கள் ஒரு பத்திரத்தை வாங்கும் போது, அந்த பத்திரத்தை வழங்கியவருக்கு நீங்கள் கடன் கொடுக்கிறீர்கள், அதற்கு ஈடாக, கடன் பத்திரத்தை வழங்கியவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிலையான விகிதத்தில் வட்டி செலுத்துவார். அந்த காலகட்டத்தின் முடிவில், கடன் பத்திரம் வழங்குபவர் உங்கள் அசல் முதலீட்டை உங்களுக்குத் திருப்பித் தருவார். Risks […]
Repo Rate vs Reverse Repo Rate பற்றிய சில தகவல்கள்
Repo rate: ரெப்போ விகிதம் என்பது இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வணிக வங்கிகளுக்கு கடன் வழங்கும் வட்டி விகிதத்தைக் குறிக்கிறது. ‘ரெப்போ’ என்ற சொல் “மீண்டும் வாங்குதல் ஒப்பந்தம்” என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. எளிமையான சொற்களில், ஒரு ரெப்போ பரிவர்த்தனை என்பது குறுகிய கால கடன் வாங்கும் ஏற்பாட்டை உள்ளடக்கியது. இதில் நிதி நிறுவனங்கள், பொதுவாக வணிக வங்கிகள், மத்திய வங்கியான ரிசர்வ் வங்கிக்கு பத்திரங்களை விற்கின்றன. அவற்றை முன்னரே தீர்மானிக்கப்பட்ட எதிர்கால தேதி மற்றும் […]