கமாடிட்டி மார்கெட்: (பகுதி 2)

MARGIN-AMOUNT

Lot என்பது ஒரு குறிப்பிட்ட தேதியில் டெலிவரி செய்வதற்காக ஆர்டர் செய்யப்பட்ட Stocks-ன் அளவைக் குறிக்கிறது.பங்குச்சந்தை வர்த்தகத்தில், LOT size என்ற வார்த்தை மிகவும் பிரபலம். பொதுவாக பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள், தங்கள் வசம் உள்ள பணத்தின் அளவை பொறுத்து, ஒரு பங்கு, இரண்டு பங்கு என்பதில் தொடங்கி, ஆயிரம், லட்சம் என்ற எண்ணிக்கையில் பங்குகளை வாங்கி வைப்பார்கள். இது போன்று, வாங்கும் அனைத்து பங்குகளுக்கு, முழு தொகையும் கொடுத்து, பங்குகளை வாங்குவது என்பது ஒரு முறை. பங்கு வர்த்தகத்தை பொறுத்தவரை, முழு தொகையையும் செலுத்தாமல், குறிப்பிட்ட தொகையை மட்டும் செலுத்தி வர்த்தகம் செய்யும் நடைமுறையும் உண்டு. இதில் முக்கியமான வகை என்பது F&O. அதாவது FUTURES & OPTIONS. இதில் தான் இந்த Lot size என்பது முக்கியமானது.

FUTURES & OPTIONSல் வர்த்தகம் செய்யும் போது, பெரிய அளவில் பங்குகளை வாங்கி, விற்று லாபம் பார்க்க முடியும். இதில் நஷ்டமும் வரும் என்பதை கவனிக்க வேண்டும். ஒரு Lot என்பது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பங்குகளை குறிக்கும். இந்த Lot size எண்ணிக்கை என்பது ஒவ்வொரு stocks-க்கும் மாறுபடும். ஒரு லாட்டில், ஒரு நிறுவனத்தின் பங்கு எவ்வளவு இருக்கலாம் என்பதை பங்குச்சந்தைகள் நிர்ணயம் செய்யும். லாட் எண்ணிக்கை அதிகம் ஆகும் போது, வரக்கூடிய லாபமோ அல்லது நஷ்டமோ இரண்டுமே அதிகமாக இருக்கும் என்பதை கவனித்தல் வேண்டும்.

Margin Amount என்பது Commodity Market – ல் உள்ள Stocks-ன் பிரிவுகளில் டிரேடிங் செய்வதற்காக செலுத்த வேண்டிய முன்பணம் ஆகும். ஒவ்வொரு Stocks-க்கும் டிரேடிங் செய்வதற்கு ஒவ்வொரு மதிப்பிலான முன்பணம் செலுத்த வேண்டும்.உதாரணமாக Crude oil-ல் டிரேடிங் செய்வதற்கு ஒரு Lot – க்கு 1,96,247 ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும். அதேபோன்று Gold Petal, Gold guinea போன்றவற்றில் டிரேடிங் செய்வதற்கு ஒரு Lot-க்கு 532 ரூபாய், 4335 ரூபாய் போன்று குறைந்த முன்பணம் செலுத்தினால் போதுமானது. Commodity Market – ல் புதிதாக டிரேடிங் செய்ய ஆரம்பிக்கும் போது சின்ன முதலீட்டிலிருந்து ஆரம்பிப்பது நல்லது. மேலும் Commodity பிரிவுகளின் Lot size மற்றும் Margin Amount கீழே உள்ள வரைபடத்தில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *