கமாடிட்டி மார்கெட்: (பகுதி-3)

TRADING-PSYCHOLOGY

Trading Psychology பற்றி பார்க்கும் முன் Market psychology என்னனு தெரிஞ்சிக்குவோம்.பொறுமை இல்லாதவர்களிடமிருந்து பணத்தை எடுத்து பொறுமை உள்ளவர்களிடம் கொடுப்பதுதான் Market Psychology.

? Trading செய்ய ஆரம்பிக்கும்போது குறைவான lots- ல் இருந்து ஆரம்பிக்க வேண்டும். 1 lot-ல் இருந்து ஆரம்பிப்பது நல்லது.

? Market live data-வை தொடர்ந்து பார்ப்பதை நிறுத்த வேண்டும்.அப்படி பார்ப்பதால் Market-ல் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை வைத்து பண இழப்பு ஏற்படுமோ என்ற பயத்தில் Target மற்றும் stop loss – ல் மாற்றம் செய்ய வாய்ப்பு ஏற்படும்.

? ஒரே Stocks – ல் மீண்டும் மீண்டும் Trading செய்வதை தவிர்க்க வேண்டும்.

?Stop loss மற்றும் Target – ஐ அடிக்கடி மாற்றுவது Trading -ல் குழப்பம் ஏற்பட வழிவகுக்கும். எனவே அதை தவிர்ப்பது நல்லது.

? Trading-ல் Profit பெற வேண்டும் என்றால் ஆவேசப்படாமல் பொறுமையாக கையாள்வது சிறந்தது.

?Mobile App மற்றும் Web App- மூலம் வழங்கப்படும் ஆலோசனைகளை வைத்து பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்.

?முயன்றவரை Paper Trading மூலம் Trading செய்வதை முழுமையாக கற்றுக்கொண்டு பிறகு Live Trading செய்வது சிறந்தது.

?தொடர்ந்து loss – ஏற்படும்போது Trading செய்வதை சில நாட்கள் தவிர்ப்பது நல்லது.

?Market பற்றிய சிறந்த ஆலோசகரை தேர்வு செய்வது முக்கியமான ஒன்றாகும்.

?கையில் உள்ள முதலீட்டை பயன்படுத்தி Trading செய்யவும். கடனாக முதலீட்டை பெற்று Trading செய்வதால் Trading-ல் Profit கிடைத்தாலும் அது உங்களுக்கு இலாபமாக இருக்காது.

?உலக பொருளாதார ஏற்ற இறக்கங்களும் Market -ல் மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே உலக பொருளாதார நிகழ்வுகள் பற்றிய செய்திகளை தினமும் பார்ப்பது நல்லது.

?அனைத்தையும் விட முக்கியமானது Market பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வதும், பிறரை சாராமல் தானாகவே trading செய்வதுமாகும்.

?Trading – ஐ பொருத்தவரை அதீத நம்பிக்கையும் இருக்ககூடாது. நம்பிக்கையில்லாமலும் இருக்ககூடாது.

?உதாரணமாக Market -ல் 1000 ரூபாய் போட்டு 2000 ரூபாய் சம்பாதிச்சிட்டோம், Market – ல் பெரிய அறிவு வந்துட்டுன்னு நினைத்து 1,00,000 ரூபாய் போட்ட 2,00,000 ரூபாய் எடுத்திருக்கலாம் அப்படிங்கிற எண்ணம் வரகூடாது.

?இந்த Trading – ஐ நல்ல விதத்தில் பண்ணியிருக்கோம் அடுத்த Trading அடுத்த Entry – ஐ நல்ல முறையில் பண்ண சிந்திக்கணுமே தவிர அதீத நம்பிக்கை ஆக கூடாது.

?Trading Statage, Market – ஐ பொறுத்தவரை மாறிக்கொண்டே இருக்கும். ஒரு நாள் follow பண்ணத தொடர்ந்து அடுத்த நாளும் பண்ணக்கூடாது.

“ஆக்கம் கருதி முதலிழுக்கும் செய்வினை

ஊக்கர் அறிவுடையார்.”

பெரும் ஆதாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து கை முதலையும் இழந்து விடக்கூடியகாரியத்தை அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள் என்று திருவள்ளுவர் அன்றே கூறியுள்ளார். அதே போன்று Trading – ஐ பொருத்தவரை Market பற்றிய அறிவு மிக முக்கியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *