Commodity Mini Trading:

MINI TRADING IMAGES AUG

Commodity Market – ல் 2023, பிப்ரவரி மாதத்திலிருந்து மீண்டும் Mini Trading – ஐ Multi Commodity Exchange-(MCX) அறிமுகப்படுத்தியுள்ளது. கமாடிட்டி மார்கெட்டை பொருத்தவரை Trading செய்வதற்கு அதிக முதலீடு தேவைப்படும். அனைவராலும் அதிக முதலீடு செலுத்தி Trading செய்ய இயலாது. எனவே Mini Trading அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு குறைவான முதலீடு இருந்தால் போதுமானதாகும்.

Zinc , Aluminium, Lead, Crude oil, Natural gas, போன்ற Stocks – ல் Mini Trading – ஐ MCX அறிமுகப்படுத்தியுள்ளது. இவை மட்டுமின்றி Gold, Silver போன்ற Stocks-லும் Mini Trading – ஐ MCX வழங்கி வருகிறது.

Zinc Mini – பிப்ரவரி 17, 2023,

Lead Mini – பிப்ரவரி 22, 2023,

Alumini – பிப்ரவரி 22, 2023,

NatGas Mini – மார்ச் 14, 2023,

Crude Mini – மார்ச் 3, 2023.

மேற்கண்ட தேதிகளில் Mini Trading – ஐ MCX அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், ஏற்கனவே Gold Petal, Gold Guniea, Silver Micro போன்ற முதலீடு குறைவான Commodity-களிலும் Trading-ஐ வழங்கி வருகிறது.

Commodity Trading -ல் ஆர்வம் இருந்தும் அதிக முதலீடு தேவைப்படும் காரணங்களால் Trading செய்யாமல் இருப்பவர்களுக்கு இந்த Mini Trading சிறந்த வாய்ப்பாக உள்ளது. மேலும் Commodity Market -ல் புதிதாக Trading செய்ய ஆரம்பிக்கும் போது Commodity Market பற்றிய முழுமையான புரிதலுடனும், மேற்கண்ட முதலீடு குறைவான Stocks – லும் Trading செய்வது நல்லது.

Gold Guinea – Lot Size 8 GRMS – க்கு 4425 ரூபாயும் , Gold petal – Lot Size 1GRMS – க்கு 541 ரூபாயும், Silver micro – Lot Size 1KGS – க்கு 7865 ரூபாயும், Gold Mini-Lot Size 100 GRMS-க்கு 54,334 ரூபாயும், Silver Mini – Lot Size 5 KGS – க்கு 40,136 ரூபாயும் முதலீடாக தேவைப்படுகிறது.

மேலும் Mini Trading – க்கான Stocks -ன் Lot Size மற்றும் Margin Amount பற்றிய விளக்கம் மேற்கண்ட வரைபடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *