Dividend Yield என்பது ஒரு யூனிட்டுக்கு வழங்கப்படும் ஈவுத்தொகையை சந்தை விலையால் வகுக்கப்படுவதாகும். Dividend Yield Mutual Funds என்பது Equity Funds ஆகும். இவை அதிக ஈவுத்தொகையை அறிவிக்கும் நிறுவனங்களின் ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி-தொடர்புடைய கருவிகளில் முதலீடு செய்கின்றன. ஒரு நிறுவனம் நல்ல லாபம் ஈட்டினால் மட்டுமே அதிக ஈவுத்தொகையை அறிவிக்க முடியும். எனவே இந்தப் பங்குகளில் பெரும்பாலானவை லாபம் ஈட்டும் நிறுவனங்களைச் சேர்ந்தவை.
Dividend Yield Funds ஆனது அதன் corpus-ல் 70-80% பங்குகளில் முதலீடு செய்கிறது. நல்ல ஈவுத்தொகையை செலுத்தும் நிறுவனங்கள் பொதுவாக சிறந்த பணப்புழக்கங்களைக் கொண்டிருக்கின்றன மற்றும் மற்ற பங்குகளை விட நிலையானதாகவும் இருக்கிறது. ஒரு பங்கு நல்ல ஈவுத்தொகையைக் கொடுத்தாலும் அதனுடைய சந்தை விலை மிக அதிகமாக இருந்தால் Dividend Yield குறைவாக இருக்கும். மேலும் அதில் நிதி முதலீடு செய்யாமலும் போகலாம்.
மறுபுறம் Dividend விருப்பத்துடன் கூடிய Mutual Fund சிலருக்கு பொருத்தமானதாக இருக்காது. ஏனெனில் அதனுடைய Net Asset Value (NAV) வேகமாக வளராது. ஒரு குறிப்பிட்ட நிகழ்வு வந்தவுடன் ஈவுத்தொகை உடனடியாக வழங்கப்படும் போது அது நிகழ்கிறது. Dividend Mutual Fund குறைந்த முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு வருமான ஆதாரம் மாதாந்திர Payout-களைப் பெற விரும்புவோருக்குப் பொருத்தமானதாக இருக்கும்.