நீங்கள் ஒரு பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்குவதற்கு முன் முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் பங்குச் சந்தையில் உள்ள பங்குகளின் முக மதிப்பு (Face Value) தான். இது சம மதிப்பு (Equal Value) என்றும் அழைக்கப்படுகிறது. பங்குகள் வெளியிடப்படுகின்ற நேரத்தில் தான் Face Value என்பது தீர்மானிக்கப்படுகிறது.
Face Value என்பது பங்குச் சந்தையில் உள்ள பெயரளவு மதிப்பை (Nominal Value) விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நிதிச்சொல்லாக இருக்கிறது. பங்குகளைப் பொறுத்தவரைக்கும் பங்குகளில் உள்ள அசல் (Original) விலையைக் குறிப்பது தான் முக மதிப்பு (Face Value) ஆகும்.
பொது வர்த்தக நிறுவனங்கள் Initial Public Offerings (IPOs) மூலம் பங்குகளை வழங்கும்போது தான் முக மதிப்பு என்பது நிர்ணயிக்கப்படுகிறது.
ஒரு நிறுவனத்தின் Share Capital என்பது அதன் முக மதிப்பின் மூலம் நமக்கு வழங்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையை பெருக்குவதன் மூலமாக கணக்கிடப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனம் ரூ.10 முக மதிப்புள்ள 1 லட்சம் பங்குகளை வெளியிட்டிருந்தால் அந்த நிறுவனத்தின் பங்கு மூலதனம் ரூ.10 லட்சமாக (1 லட்சம்x10) இருக்கும். இந்த பங்குகள் முதலீட்டாளர்களுக்கு முக மதிப்பில் மூலம் வழங்கப்படலாம் அல்லது கட்டண மதிப்பை (Payment Value) விட அதிகம் (பிரீமியம்) அல்லது முக மதிப்பை விட குறைந்த விலையில் (தள்ளுபடி) வழங்கப்படலாம்.