Gross Profit Margin (GPM) மற்றும் Net profit Margin (NPM) என்றால் என்ன?

GPM and NPM

Gross Profit Margin என்பது ஒரு நிறுவனம் தனக்காகும் செலவுகள் போக , விற்பனைப் பணத்தில் எத்தனை சதவிகிதம் லாபம் பார்க்கிறது என்பதாகும். இது வரி மற்றும் தேய்மானத்துக்கு (Depreciation) முந்தைய லாபச் சதவிகிதம்.

Net profit Margin (NPM).

Net profit Margin என்பது வரி மற்றும் தேய்மானத்துக்குப் பிந்தைய லாப சதவிகிதம். 100 ரூபாய்க்கு வியாபாரம் , 70 ரூபாய் செலவுகள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் வரி, தேய்மானத்துக்கு முந்தைய லாபம் என்பது ரூ. 100-70 = ரூ 30 ஆகும். இப்பொழுது GPM என்பது நூற்றுக்கு முப்பது, அதாவது 30 சதவிகிதம்

இந்த Gross Profit-க்கு வரி 10 ரூபாய், தேய்மானம் ஐந்து ரூபாய் என்றால் மொத்தம் ரூபாய் 15. Gross Profit-லிருந்து இதையும் கழித்தால் வருவது நிகர லாபம் = ரூ 30-15= ரூ 15. இது 100 ரூபாய்க்கு. ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் NPM 15 சதவீதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *