Stock Analysis – Harrisons Malayalam Ltd.

Harrisons

கேரளாவின் 2-வது தோட்டக்கலை கண்காட்சி ஜனவரி 20,2024 முதல் கொச்சியில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் தோட்டக்கலைத்துறை, இத்துறையை ஊக்குவிப்பதற்காக பெரிய சீர்திருத்தங்களை எதிர்பார்க்கின்றது. கேரளாவை அடிப்படையாகக் கொண்ட பெரிய தோட்டத் துறை பங்குகளில் ஒன்றான HML Ltd நிறுவனத்தைப் பற்றி இங்கு பார்ப்போம்.

Harrisons Malayalam Ltd (HML) தென்னிந்தியாவின் பழமையான 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நிறுவனம். இது கார்ப்பரேட் விவசாயத்தில் முன்னோடியாக இருந்து வருகிறது. மேலும் இது தேயிலை, ரப்பர், கோகோ, காபி மற்றும் பலவகையான தோட்டங்களை நிறுவி நடத்தி வருகிறது. இன்று இந்த நிறுவனம் சுமார் 14,000 ஹெக்டேரில் பயிரிடுகிறது மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள மற்ற விவசாய நிலங்களில் இருந்து உற்பத்தி செய்கிறது. ரப்பர், தேயிலை மற்றும் அன்னாசிப்பழம், முறையே 7,400 ஹெக்டேர், 6,000 ஹெக்டேர் மற்றும் 1000 ஹெக்டேர் சொந்த விளைநிலங்களில், நிறுவனத்திற்கு அதன் முதன்மை தயாரிப்புகளை வழங்குகிறது.

இந்நிறுவனத்திற்கு சொந்தமாக 6 தேயிலை தோட்டங்கள், 5 தேயிலை தொழிற்சாலைகள், 5 ரப்பர் தோட்டங்கள் மற்றும் 3 ரப்பர் தொழிற்சாலைகள் உள்ளன. சுமார் 9,000 டன் ரப்பர், 20,000 டன் தேயிலை மற்றும் 25,000 டன் அன்னாசி உற்பத்தியுடன், தென்னிந்தியாவின் மிகப்பெரிய விவசாய நடவடிக்கையாக மேற்கொள்ளும் நிறுவனமாக HML உள்ளது. மேலும் 2021 ஆம் ஆண்டில் இந்நிறுவனம் இந்தியாவில் வேலை செய்ய சிறந்த இடத்தில் 6 வது ரேங்க் மற்றும் ஆசிய அளவில் வேலை செய்ய சிறந்த இடத்தில் 16 வது ரேங்க் வாங்கியுள்ளது.

மேலும் இந்நிறுவனம் தொடர்பான சில முக்கிய குறிப்புகள்:

52 week Range : Rs.104-194
CMP : 168
Book Value: 84
Market Capital: 311 Cr
Debt to Equity Ratio : 0.59
Face value: 10

இந்நிறுவனத்தின் வருவாய் சுமார் 470 கோடி.

கடந்த ஆண்டு லாபம் 17 கோடி.

லாபத்தில் நிலைத்தன்மை ஒரு சவாலாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக புத்தக மதிப்பு அதிகரித்து வருகிறது.

நிகர பணப்புழக்கம் எதிர்மறையாக உள்ளது.

இந்த மாநாட்டின் மூலம், இந்தத் துறைக்கு கிடைக்கும் ஒரு பெரிய ஊக்கம், இந்த நிறுவனத்திற்கான சொத்து மற்றும் மதிப்பீடுகளை உயர்த்தலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *