பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன், ஒரு பங்கின் மதிப்பு மற்றும் விலை ஆகிய இரண்டிருக்கும் உள்ள வேறுபட்ட கருத்துக்களைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
Intrinsic Value (உள்ளார்ந்த மதிப்பு) என்பது ஒரு நிறுவனத்தினுடைய எதிர்கால வருவாய்த் திறனை அடிப்படையாகக் கொண்டு, ஒரு பங்குக்கான மதிப்பிடப்பட்ட மதிப்பாகும். Market Price என்பது பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகமாகும் விலையாகும். Intrinsic Value-வில் பல்வேறு வகையான மதிப்பீடுகள் உட்பட பல காரணிகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். Intrinsic Value எந்த நேரத்திலும் சந்தை விலைக்கு சமமாகவோ, குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கலாம்.
சந்தை மதிப்பை விட Intrinsic Value (உள்ளார்ந்த மதிப்பு) அதிகமாக இருந்தால், பங்கு குறைமதிப்பிற்கு (underestimate) உட்பட்டதாகவே கருதப்படுகிறது. சந்தை மதிப்பை விட உள்ளார்ந்த மதிப்பு குறைவாக இருந்தால், பங்கு அதிகமதிப்பிற்கு உட்பட்டதாக கருதப்படுகிறது.
சந்தை மதிப்பு என்பது ஒரு நிறுவனத்தைப் பற்றிய பொது உணர்வின் பிரதிபலிப்பாகும். இது சந்தையில் விற்கப்படும் பங்குகளின் தேவை மற்றும் விநியோகத்தைப் பொறுத்தது. அதாவது சந்தையில் ஒரு பங்கிற்கு வலுவான தேவை இருந்தால் அதன் விலை உயரும். அதேசமயம் அதற்கான தேவை குறைவாக இருந்தால் அதன் விலை கீழ்நோக்கி நகரும்.
உள்ளார்ந்த மதிப்பு என்பது ஒரு பங்கின் அடிப்படை அல்லது உண்மையான மதிப்பு. சந்தை மதிப்பைப் போல, அது பொதுமக்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை.இது ஒரு பங்கின் புத்தக மதிப்பை அல்லது அடிப்படை மதிப்பை தீர்மானிக்க பயன்படுகின்றது. சில சமயங்களில் பங்குகளின் உள்ளார்ந்த மதிப்பை அடைவது முதலீட்டாளர்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும்.