Large Cap, Mid Cap, Small Cap பங்குகள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன?

Large-vs-Mid-vs-Small-Cap-Funds

பங்குச்சந்தையில் Large Cap, Mid Cap, Small Cap பங்குகள் உள்ளன. இவை எவ்வாறு பிரிக்கப்படுகின்றன, இவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியுமா?Cap என்பது Market Capitalization-ஐ குறிக்கும். இதைப் பொறுத்தே பங்குகள் மேற்கூறிய மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன.

Market Capitalization என்றால் என்ன?

ஒரு நிறுவனத்தின் மொத்த Value-வை குறிப்பது அதனுடைய Market capitalization ஆகும். இது ஒரு நிறுவனத்தின் மொத்த பங்குகளை அதன் தற்போதைய விலையால் ( Current market Price) பெருக்க கிடைப்பதாகும்.

உதாரணத்திற்கு,ஒரு நிறுவனத்திடம் பத்தாயிரம் பங்குகள் உள்ளன அதன் தற்போதைய விலை 100 ரூபாய் எனில், அதனுடைய மொத்த value ரூ. 10 லட்சம் ஆகும்.

Market capitalization= 10,000 x Rs.100

= Rs.10,00,000.

SEBI (securities exchange of India) எனும் அமைப்பு இந்திய பங்குச் சந்தையில் உள்ள நிறுவனங்களை அதன் Market capitalization மூலம் வரிசைப்படுத்தியுள்ளது.

1. Large cap:

Market capitalization வரிசையில் உள்ள முதல் 100 கம்பெனிகள் இந்த வகையில் வரும். இவை ‘Blue chip stocks’ எனவும் அழைக்கப்படும். இந்த வகையில் உள்ள நிறுவனங்களின் மொத்த மதிப்பு 20 ஆயிரம் கோடிகளுக்கு மேல் இருக்கும்.

2. Mid cap:

பங்குச்சந்தையில் Market capitalization வரிசையில் 101 முதல் 250 வரை உள்ள நிறுவனங்கள் Mid cap வகையில் வரும். இந்த வகையில் உள்ள நிறுவனங்களின் மொத்த மதிப்பு 5000 கோடி முதல் 20 ஆயிரம் கோடி வரை இருக்கும்.

3. Small cap:

Market capitalization வரிசையில் 250-க்கு அடுத்துள்ள அனைத்து நிறுவனங்களும் small cap -இன் கீழ் வரும். இந்தவகை நிறுவனங்களின் மொத்த மதிப்பு 5000 கோடிக்கும் கீழ் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *