Market Liquidity என்றால் என்ன?

market liquidity

Liquidity என்பது ஒரு சொத்தை அல்லது பங்கை நிலையான விலையில் எளிதாக வாங்க, விற்க உதவும் பணப்புழக்கத்தை குறிக்கிறது. தேவை மற்றும் வழங்கல் போதுமான அளவு இருக்கும் போது வாங்குதல் மற்றும் விற்பது நிகழ்கிறது. விற்பவர்களின் எண்ணிக்கையை விட வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், Supply குறைவாக இருக்கும். மாறாக, வாங்குபவர்களை விட விற்பனையாளர்கள் அதிகமாக இருந்தால், போதுமான Demand இருக்காது.

Market Liquidity என்பது பரிவர்த்தனைகள் நிகழ்வதை எளிமையைக் குறிக்கிறது. நீங்கள் ஒரு சந்தையில் சொத்துக்களை எளிதாக வாங்கவோ அல்லது விற்கவோ முடியும் என்றால், எல்லா நேரங்களிலும் போதுமான வாங்குபவர்களும் விற்பவர்களும் இருப்பார்கள், வர்த்தகத்தில் நுழைவதை நீங்கள் சிரமமின்றி செய்யலாம்.

உதாரணமாக, நீங்கள் சில நிறுவனங்களின் பங்குகளை எளிதாக வாங்கவோ அல்லது விற்கவோ முடிந்தால், அந்த பங்குகளுக்கான பங்குச் சந்தை பணப்புழக்கம் அதிகமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், போதுமான சந்தை பங்கேற்பாளர்கள் இல்லை என்றால், சந்தையில் பணப்புழக்கம் நன்றாக இருக்காது. இந்த சமயத்தில் உங்களால் இந்த பங்குகளை சரியான விலையில் வாங்கவோ விற்கவோ முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *