Multi Cap Fund vs Flexi Cap Fund என்றால் என்ன?

Mutual Fund- ஐ பொருத்தவரை பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்ய Large cap Fund-களும், நடுத்தர நிறுவனங்களில் முதலீடு செய்ய Mid Cap Fund-களும், சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்ய Small Cap Fund-களும் உள்ளன.

பெரிய, சிறிய மற்றும் நடுத்தர என அனைத்து நிறுவனங்களிலும் முதலீடு செய்யும் ஒரு நிதி வகை தான் Multi Cap Fund. இந்த மூன்று வகையான நிறுவனங்களிலும் (large, mid, small cap) தலா 25% முதலீடு செய்யப்படுகிறது. மீதி 25% தொகையானது Fund Manager-ன் விருப்பத்தின்படி எந்த வகை நிறுவனத்தில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

ஆனால், Flexi Cap-ல் இந்த மாதிரியான எந்த கட்டுப்பாடும் கிடையாது. Fund Manager-ன் விருப்பத்தின்படி எந்த வகை நிறுவனத்திலும், எவ்வளவு தொகை வேணாலும் முதலீடு செய்யலாம். தற்போதைய நிலவரத்தின் படி, 70-75 சதவீத முதலீடானது Large Cap நிறுவனங்களிலே முதலீடு செய்யப்படுகிறது.

இவை இரண்டும் Equity Fund-களாக இருப்பதால் நீண்ட கால நோக்கில் நல்ல பலனை அளிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *