மியூச்சுவல் ஃபண்ட்- ஓர் அறிமுகம்!

Mutual-Funds

பொதுவாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் பொழுது ஒரு குறிப்பிட்ட பங்கின் கடந்த கால செயல்பாடு, தற்கால செயல்பாடு, எதிர்கால முன்னெடுப்புகள், Fundamental Analysis, Technical Analysis போன்ற பல்வேறு ஆய்வுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

“நான் பங்குச்சந்தை முதலீட்டிற்கு புதிதானவர். எனக்கு பங்குச்சந்தை பற்றிய அறிமுகம் கிடையாது. நான் எவ்வாறு முதலீடு செய்வது?” போன்ற கேள்விகள் எழும், அதே வேளையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள நபர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்.

இதில் எவ்வாறு முதலீடு செய்வது?

பொதுவாக மியூச்சுவல் பண்டில் முதலீடு இருவகையில் முதலீடு செய்யப்படுகிறது.

  1. SIP ( Systemetic Investment Plan)- இம்முறையில் மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையானது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்யப்படும்.
  2. Lump Sum Investment – இம்முறையில் முதலீடானது, மொத்தமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்யப்படும்.

உங்களிடம் உள்ள முதலீட்டின் அளவிற்க்கு ஏற்ப இவை இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் எவ்வாறு செயல்படுகிறது?

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்படும் உங்களது பணமானது பங்குச்சந்தை துறையில் அனுபவம் வாய்ந்த, SEBI -ன் அங்கீகாரம் பெற்ற Fund Manager-கள் மூலம் உங்களது பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும். இதன் மூலம் நேரடியாக முதலீடு செய்யப்படும் போது உருவாகும் Risk-ஆனது குறைக்கப்படுகிறது. மேலும், இவை அனுபவம் வாய்ந்த Fund Manager-கள் மூலம் நிர்வகிக்கப்படுவதால் நீண்டகால நோக்கில் நல்ல லாபத்தை தரும்.

மியூச்சுவல் ஃபண்ட் வகைகள்:

முதலீட்டாளர்களின் பல்வேறு வகையான முதலீட்டு வசதிக்கேற்ப, மியூச்சுவல் ஃபண்டுகள் பொதுவாக கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றன.

  1. Organisation Structure – Open ended, Close ended, Interval Funds.
  2. Management of Portfolio – Actively or Passively.
  3. Investment Objective – Growth, Income, Liquidity Funds.
  4. Underlying Portfolio – Equity, Debt, Hybrid, Money market instruments, Multi Asset Funds.
  5. Thematic / Solution oriented – Tax saving, Retirement benefit, Child welfare, Arbitrage Funds.
  6. Exchange Traded Funds.
  7. Overseas Funds.
  8. Fund of Funds.

இவை ஒவ்வொன்றை பற்றியும் அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக காண்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *