NCD-Non Convertible Debentures என்றால் என்ன?

NCD

NCD என்பது கடன் சார்ந்த திட்டமாகும். தற்போது வெளிவரும் திட்டங்கள் Secured NCD ஆகும். Secured NCD-களில் நிறுவனங்கள் தங்களது சொத்துக்களை முதலீட்டாளர்களிடம் அடமானமாக வைத்து நிதி திரட்டுவதால், இதில் முதலீடு செய்யும் பணத்திற்கு உத்திரவாதம் அதிகம். வங்கிகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் Fixed Deposit மூலம் நிதியை திரட்டுகின்றன இவை Unsecured NCD ஆகும்.

பங்குகளை வாங்கி விற்பது போல் NCD-களையும் வாங்கி விற்கலாம். Demat Account-ல் இந்த NCD-கள் இருப்பதால் Capital-இல் வருமான வரி பிடிப்பதில்லை என்பது இதிலுள்ள கூடுதல் தகவல்.

NCD-களை வாங்கி, Maturity Period வரை வைத்திருப்பவர்களுக்கு Share Market-இல் ரிஸ்க் ஏதும் இல்லை. அதே சமயம், தங்கள் தேவைகளுக்காக Maturity Period முன் Share Market-இல் விற்க முற்படும்போது அன்றைய வட்டி விகிதத்தை பொறுத்து விலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.

இது போன்றவற்றில் முதலீடு செய்பவர்கள் அதிகமாக Share Market-இல் விற்க வரமாட்டார்கள். இதனால், Share Market-இல் வரத்தகமாகும் அளவு குறைவாக இருக்க வாய்ப்பு உண்டு. இதனால், Liquidity Risk ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *