SEBI T+0 Settlement- ஐ அறிமுகப்படுத்தியுள்ளது: இதனால் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா?

சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கு மூலதனச் சந்தைகள் Securities and Exchange Board of India (SEBI) வரும் மார்ச் மாதம் 28-ம் தேதி, 2024-கான முதல் விருப்ப அடிப்படை T+0 தீர்வுக்கான Beta Version- ஐ அறிமுகப்படுத்துகிறது.

புதிய மற்றும் விருப்பமான தீர்வு சுழற்சியை அறிமுகம் செய்வதாக SEBI கூறியது என்னவென்றால் “25 scripts மற்றும் சில தரகர்களுக்கு விருப்பமான T+0 தீர்வுக்கான பீட்டா பதிப்பை வெளியிட வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு இணையாக பீட்டா பதிப்பின் பயனர்கள் உட்பட பங்குதாரர்களின் ஆலோசனையை செபி தொடர்ந்து மேற்கொள்ளும்.”

நடைமுறைப்படுத்தப்பட்ட நாளிலிருந்து மூன்று மற்றும் ஆறு மாதங்களின் முடிவில் வாரியம் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து அடுத்த படிகளைத் தீர்மானிக்கும் மற்றும் பங்குதாரரின் கருத்தை கருத்தில் எடுத்துகொள்ளும் என SEBI அறிவித்துள்ளது. மும்பையில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற செபியின்-204வது வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

T+0 தீர்வு எதுக்கெல்லாம் பொருந்தும் என்பதை பார்ப்போம்:

T+0 தீர்வு நிதி மற்றும் பத்திரப் பரிவர்த்தனைகள் ஆகிய இரண்டிலும் வர்த்தகம் செய்ய தொடங்கும் போது அவை ஒரே நாளில் தீர்க்க அனுமதிக்கிறது. தற்போது Indian securities markets T+1 Settlement சுழற்சியில் இயங்குகின்றன. இதற்கு அடுத்த நாளே வர்த்தகத்தின் தீர்வு நடக்கும்.

2002-ல் சீராக்கி (Regulator) தீர்வு காலத்தை T+5-லிருந்து T+3 ஆகக் குறைத்தது. மேலும் 2003-ல் SEBI அதை T+2 ஆகக் குறைத்தது. 2021-ம் ஆண்டில் T+1 தீர்வு தொடங்கப்பட்டு அதை படிப்படியாக செயல்படுத்த தொடங்கியது மற்றும் இறுதியாக அதன் முடிவு ஜனவரி 2023-ல் நிறைவடைந்தது.

கடந்த வார தொடக்கத்தில் SEBI-யின் தலைவர் உடனடி தீர்வு என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகள் போட்டித்தன்மை கொண்டதாக மாறும் மற்றும் முதலீட்டாளர்களுக்கு மற்றவர்களுக்கு நன்மைகள் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என கூறினார்.

2023 டிசம்பர்-22 அன்று வெளியிடப்பட்ட ஆலோசனைகளில் குறுகிய தீர்வு சுழற்சியானது விரைவான தீர்வை எளிதாக்குவதன் மூலம் பங்குதாரர்களுக்கு அதிக மகிழ்ச்சியை வழங்கும் என SEBI குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *