Smart Money Concept or Supply and Demand

ஒரு பொருளுக்கான விலை என்பது எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? அதனுடைய Supply and Demand-ஐ பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. எப்பொழுதெல்லாம் Supply அதிகமாக இருக்கிறதோ, அப்பொழுதெல்லாம் Demand குறைவாக இருக்கும். டிமாண்ட் குறைவாக இருக்கும் போது அந்த பொருளின் விலையும் குறைவாக இருக்கும். இது தான் பங்கு சந்தையிலும் நடைபெறுகிறது.

நீங்கள் வாங்கக்கூடிய ஸ்டாக்-ஐ யாராவது ஒருவர் விற்றால் தான் நீங்கள் வாங்க முடியும். இது தான் சப்ளை மற்றும் டிமாண்ட். இந்த Supply and Demand-ஐ வைத்துதான் பங்கு சந்தையில் தினமும் டிரேடிங் நடைபெறுகிறது. பங்குச்சந்தையின் விலை உயர்வதும், குறைவதும் நடைபெறுகிறது.

உதாரணத்திற்கு இன்று ஒரு நிறுவனத்தின் ரிசல்ட் வருகிறது என்றால், அந்த நிறுவனத்தின் கைகளில் நிறைய நல்ல ப்ரொஜெக்ட்கள் உள்ளது என்றால் அந்த நிறுவனத்தின் Stock-ஐ வாங்குவதற்கு நிறைய பேர் முயற்சி செய்வார்கள். அப்பொழுது அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை அதிகரிக்கும்.

இதுவே ஒரு நிறுவனத்தில் இருந்து Negative News வரும் பொழுது பெரும்பாலான பங்குதாரர்கள் தங்களிடம் இருக்கும் பங்குகளை விற்பதற்கு முயற்சி செய்வார்கள். அப்பொழுது அந்த பங்குகளுக்கான சப்ளை அதிகமாகி அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை சரியும்.

பங்குகளை வாங்குவதற்கும் முன் நமது Maitra Wealth செயலியில் விற்பவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறாரகள்; வாங்குவதற்கு எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று சுலபமாக தெரிந்து கொள்ளலாம். அதோடு மட்டும் இல்லாமல் என்ன விலையில் விற்பதற்கும் (Asking Price) வாங்குவதற்கும் (Bidding Price) இருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *