பசுமாடு வாங்கும்பொழுது அதன் வயது மற்றும் வருங்காலத்தில் எவ்வளவு பால் கறக்கும் என்றெல்லாம் பார்ப்போம் அல்லவா. அதுபோலதான் பங்குச்சந்தையை பொறுத்தவரை அதில் உள்ள நிறுவனங்களையும் பார்ப்பார்கள். ஒரு நிறுவனம் இப்பொழுது நன்றாக சம்பாதிக்கிறது அதெல்லாம் சரிதான்… ஆனால் அதே நிறுவனம், அடுத்த வருடம், அதற்கடுத்த வருடமெல்லாம் எவ்வளவு சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கின்றன? அப்பொழுது அந்த நிறுவனத்தின் EPS என்னவாக இருக்கும்? அப்பொழுது என்ன விலையில் இருக்கும் என்றெல்லாம் கணக்கு போட்டு, இன்றைய விலையினை முடிவுசெய்கிறார்கள். அதாவது இன்று […]