TERM INSURANCE

An Introduction to Term Life Insurance in Singapore

ஆயுள் காப்பீட்டில் தனியார் நிறுவனங்கள் உள்ளே வந்த பிறகு தான் பல புதிய திட்டங்கள் அறிமுகம் ஆயின. கூடவே Term Insurance பற்றிய விழிப்புணர்வும் வந்தது. அதற்கு முன்புவரை participated insurance policy, guaranteed income policy, Ulip policy தான் LIC முகவர்கள் அதிகம் விற்றுக் கொண்டிருந்தார்கள்.

Term insurance-ல் பணம் திரும்பி வராது, இறந்தால் மட்டும்தான் குடும்பத்திற்கு செல்லும் என்று சொல்லி வாடிக்கையாளர் கேட்டாலும் அதை நிராகரித்து விட்டு வேறொரு பாலிசியை அறிமுகப்படுத்துவார்கள்.
ஆனால் இன்சூரன்ஸ் என்பதே risk management தான். வருமானம் ஈட்டும் குடும்ப தலைவர் இறந்துவிட்டால் அவர் குடும்பம் நிதி ஆதாரமில்லாமல் தடுமாறக் கூடாது என்பதற்காக ஆயுள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். அதுவும் குடும்பத் தலைவரின் ஆண்டு வருமானத்தை போல் குறைந்தது 20 மடங்குக்கு காப்பீடு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் Term Insurance செய்கிறது.

ஆயுள் காப்பீட்டுத் துறையில் முதன்முதலாக இணைந்த தனியார் நிறுவனம் HDFC life பல புதிய காப்பீட்டு திட்டங்களை ஒவ்வொரு வருடமும் அறிமுகப்படுத்திக் கொண்டே வந்தார்கள். Term insuranceல் Riders எனப்படும் பல துணை பாலிசிகளை அதனுடன் கொடுத்து வந்தார்கள். அதன்படி, Term Insurance உடன் பென்சன் திட்டத்தையும் சேர்த்து கொண்டு வந்திருக்கிறார்கள்.

இந்தத் திட்டத்தின்படி 30 வயதில் இருக்கும் ஒரு நபர் தனது 75 வயது வரை டெர்ம் இன்சுரன்ஸ் எடுக்கும்போது அவரது 60வது வயது முடிந்தவுடன் மாதாமாதம் அவரது மொத்த காப்பீட்டுத் தொகையில் 0.1 சதவீதம், அதாவது ஒரு கோடிக்கு காப்பீடு எடுத்திருந்தால் மாதம் பத்தாயிரம் என்று காப்பீட்டு பலனை கொடுப்பார்கள். அவரது 75 வயது வரை கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். இதற்கு நடுவில் பாலிசிதாரர் இறக்க நேரிட்டால் அவரது குடும்பத்திற்கு அவர் வாங்கிய காப்பீட்டுபலன் போக மீதி உள்ள பெரும் தொகையை அப்படியே கொடுத்துவிடுவார்கள்.

இதன் மூலம் காப்பீடு எடுத்தவர் வாழும்போதும், வாழ்ந்த பிறகு அவரது குடும்பமும் பலன் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
நல்ல பணியில் உள்ளவர்கள் குறைந்தபட்சம் 2 கோடிக்கு எடுக்கும்போது அவர்களது ஓய்வுகால பலனாக மாதம் 20 ஆயிரம் என்பது வந்துகொண்டே இருக்கும். இதற்காக அவர் கட்டும் தொகை அவருக்கு கிடைக்கும் வாழ்நாள் பலனுடன் ஒப்பிடுகையில் 5 சதவீதத்திற்கும் குறைவே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *