Trading Psychology பற்றிய விளக்கம்:

🔹 Trading செய்ய ஆரம்பிக்கும்போது குறைவான lots- ல் இருந்து ஆரம்பிக்க வேண்டும். 1 lot-ல் இருந்து ஆரம்பிப்பது நல்லது.

🔸 Market Live Data-வை தொடர்ந்து பார்ப்பதை நிறுத்த வேண்டும். அப்படி பார்ப்பதால் Market-ல் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை வைத்து பண இழப்பு ஏற்படுமோ என்ற பயத்தில் Target மற்றும் Stop Loss-ல் மாற்றம் செய்ய வாய்ப்பு ஏற்படும்.

🔹 ஒரே Stocks – ல் மீண்டும் மீண்டும் Trading செய்வதை தவிர்க்க வேண்டும்.

🔸Stop loss மற்றும் Target – ஐ அடிக்கடி மாற்றுவது Trading -ல் குழப்பம் ஏற்பட வழிவகுக்கும். எனவே அதை தவிர்ப்பது நல்லது.

🔹 Trading-ல் Profit பெற வேண்டும் என்றால் ஆவேசப்படாமல் பொறுமையாக கையாள்வது சிறந்தது.

🔸Mobile App மற்றும் Web App- மூலம் வழங்கப்படும் ஆலோசனைகளை வைத்து பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்.

🔹முயன்றவரை Paper Trading மூலம் Trading செய்வதை முழுமையாக கற்றுக்கொண்டு பிறகு Live Trading செய்வது சிறந்தது.

🔸தொடர்ந்து loss – ஏற்படும்போது Trading செய்வதை சில நாட்கள் தவிர்ப்பது நல்லது.

🔹Market பற்றிய சிறந்த ஆலோசகரை தேர்வு செய்வது முக்கியமான ஒன்றாகும்.

🔸கையில் உள்ள முதலீட்டை பயன்படுத்தி Trading செய்யவும். கடனாக முதலீட்டை பெற்று Trading செய்வதால் Trading-ல் Profit கிடைத்தாலும் அது உங்களுக்கு இலாபமாக இருக்காது.

🔹உலக பொருளாதார ஏற்ற இறக்கங்களும் Market -ல் மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே உலக பொருளாதார நிகழ்வுகள் பற்றிய செய்திகளை தினமும் பார்ப்பது நல்லது.

🔸அனைத்தையும் விட முக்கியமானது Market பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வதும், பிறரை சாராமல் தானாகவே Trading செய்வதுமாகும்.

🔹Trading – ஐ பொருத்தவரை அதீத நம்பிக்கையும் இருக்ககூடாது. நம்பிக்கையில்லாமலும் இருக்ககூடாது.

🔸Trading Strategy Market – ஐ பொறுத்தவரை மாறிக்கொண்டே இருக்கும். ஒரு நாள் போல அடுத்த நாள் இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *