What is compound effect?

whats compound interest 1593083925QwfE5 detail

Compound Effect என்பது ஒரு தொழிலோ அல்லது ஒரு தேசத்தின் வளர்ச்சியோ அல்லது வேற எந்த ஒரு வளர்ச்சியாக இருந்தாலும் அதன் ஆரம்பத்தில் மெதுவாகத்தான் நிகழும். ஆனால் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும்.


இயற்கையில் இதை நீங்கள் காணலாம். ஒரு குழந்தையின் கரு முதல் மூன்று மாதங்களுக்கு கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு இருக்கும். அடுத்த மூன்று மாதத்தில் கண்ணுக்குத் தெரியும் அளவில் எல்லா பாகங்களும் இருந்தாலும் மிகச்சிறியதாக இருக்கும். கடைசி மூன்று மாதத்தில் தான் குழந்தையின் மொத்த எடையில் 70 சதவீத உடம்பு உருவாகும்.


முதன்முறையாக களம் இறங்கும் ஒரு தொழில் முனைவோர் செய்யும் தொழிலில் எடுத்தவுடன் வெற்றி பெற்று விடுவதில்லை. மெதுவாகத்தான் வளரும். எந்த ஒரு தொழிலிலும் இந்த நிதானமான வளர்ச்சி தான் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும்.
முதன்முறை தொழில் முனைவோர் தொடங்கும் ஒரு தொழிலில் அதன் வளர்ச்சி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு வெளியே தெரியாது. பல சோதனைகள், நட்டங்கள் ஏற்படலாம். அவற்றிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு அந்தத் தொழிலில் அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொள்ளும் போது அது நிச்சயம் வளரவே செய்யும். முதல் ஐந்து ஆண்டுகளுக்கு தாக்குப் பிடிக்கும் அளவிற்கு மனதிடமும், முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தாக்குப்பிடிக்கும் பொருள் திடமும் வேண்டும்.


பங்குச் சந்தையிலும் இந்த நிதானம் உள்ளவர்கள் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்கள். Warren buffet பங்குச் சந்தையில் நுழைய வேண்டும் என்று முடிவு செய்தபோது அவருக்கு வயது 15. அதற்காகவே அவர் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் எடுத்து படித்தார். அதுதான் அவரது வளர்ச்சிக்கு கை கொடுத்தது.
பங்குச்சந்தையையும் பொருளாதாரத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். படிப்படியாக புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எளிமையாக சொல்வதென்றால் நமது ரிஸ்கின் அளவை எடுத்தவுடன் அதிக படுத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாக கூட்ட வேண்டும்.


பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதற்கு முன் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அதில் முதலீடு செய்து பார்க்க வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்வதில் நீண்ட கால திட்டங்கள் வைத்திருந்தால் பன்மடங்கு வெற்றியை பெறலாம்.


மியூச்சுவல் ஃபண்ட் முதல் மூன்று வருடங்களுக்கு பெரிய வளர்ச்சியை காண்பதில்லை. அதன் பிறகு தான் நல்ல வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமா மேலே சென்று பத்து ஆண்டுகளில் மும்மடங்கு வளர்ச்சியை கொண்டு வந்து சேர்த்திருக்கும்.
இதைப் புரிந்து கொண்டவர்கள் நிச்சயம் நீண்ட காலம் வெற்றி பெறுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *