Forward Earnings என்றால் என்ன?

forward earnings

பசுமாடு வாங்கும்பொழுது அதன் வயது மற்றும் வருங்காலத்தில் எவ்வளவு பால் கறக்கும் என்றெல்லாம் பார்ப்போம் அல்லவா. அதுபோலதான் பங்குச்சந்தையை பொறுத்தவரை அதில் உள்ள நிறுவனங்களையும் பார்ப்பார்கள்.

ஒரு நிறுவனம் இப்பொழுது நன்றாக சம்பாதிக்கிறது அதெல்லாம் சரிதான்… ஆனால் அதே நிறுவனம், அடுத்த வருடம், அதற்கடுத்த வருடமெல்லாம் எவ்வளவு சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கின்றன? அப்பொழுது அந்த நிறுவனத்தின் EPS என்னவாக இருக்கும்? அப்பொழுது என்ன விலையில் இருக்கும் என்றெல்லாம் கணக்கு போட்டு, இன்றைய விலையினை முடிவுசெய்கிறார்கள். அதாவது இன்று என்ன விலை வரை வாங்கலாம் என்று முடிவுசெய்கிறார்கள்.

அந்த நிறுவனத்தின் வருங்கால சம்பாத்தியத்தினை கணக்கிட்டால், இப்பொழுது இருக்கும் விலை குறைவா.? குறைவா இருந்தால் அந்த நிறுவனத்தின் பங்கை வாங்கலாம், இல்லை விலை அதிகமாக உள்ளதா அப்பொழுது வாங்காமல் இருக்கும் பங்கை விற்றுவிடலாம் என்று முடிந்துபோன காலத்துக்கு என்ன என்று பார்க்காமல், வரப்போகும் காலங்களில் ஒரு நிறுவனம் எவ்வளவு சம்பாதிக்கும் என்பதை கணக்கிடுவதை Forward Earnings என்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *